Skip to content
Home » 50 % மக்கள் ஆதார் எண் இணைத்துவிட்டனர்….. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

50 % மக்கள் ஆதார் எண் இணைத்துவிட்டனர்….. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் இன்று அளித்த பேட்டி வருமாறு:

விளைாயட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அவர்கள்  வரும் ஞாயிறு  காலை 10 மணிக்கு கோவை நேரு விளையாட்டு அரங்கில் ஆய்வு பாணி மேற்கொள்கிறார். பின்னர்  கலெக்டர் ஆபீசில்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு குறித்து ஆய்வு பணிகளையும்  அதே போல சிறப்பு திட்டங்களில் கோவையில் நடைபெறும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்கிறார். அந்த பணி முடிந்ததும் இந்த இடத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. கோவையில் 3 விழாக்கள் நடக்கிறது. இதில்  அமைச்சர் உதயநிதி  கலந்து கொள்கிறார்.

கோவை வ உசி மைதானத்தில் 25 அயிரம் பேருக்கும்,  கிணத்துக்குடவில்1 லட்சத்து 7 ஆயிரம்  பேருக்கம் முதல்வர் அவர்கள் நலத்திட்ட உதவிகள்  வழங்கினார்.  அதன் தொடர்ச்சியாக அரசு திட்டங்கள் விரைவாக செல்படுத்தப்பட  வேண்டும் என்ற முதல்வரின்  வழிகாட்டுதல்படி  அமைச்சர் உதயநிதி கோவைக்கு வருகை தந்து முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்துபுதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் விழாவில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு நலதிட்ட உதவிகள் வழங்குவார். எத்தனை பேருக்கு வழங்குவார் என்பதை இன்னும் சிறிது நேரத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கிறோம்.

அரசு நிகழச்சிக்கு வந்திருக்கிறோம். உயர் அதிகாரிகள் இருக்காங்க அரசியல் சார்ந்த கேள்விகள் வேண்டாம். அரசு விழாக்கள் பற்றி பேசுகிறோம். அரசியல் சார்ந்த கேள்விகளை தவிர்த்து விடலாம்.

சிலபேர் உச்சநீதிமன்றம் வரை போய் இலவச திட்டங்கள் கூடாது என்று வழக்கு தொடர்ந்தனர். அதே இயக்கங்கள் தேர்தல் வந்தால் நமது முதல்வர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே செயல்படுத்திய திட்டங்களை அந்த கட்சிகள் அந்த மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதிகளாக கொடுக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தில் ஒரு கருத்தையும், தேர்தல் களத்தில் ஒரு நிலையையும் எடுக்கிறார்கள். நீதிமன்றத்தில் ஒரு கருத்தையும், தேர்தலில் ஒரு கருத்தையும் என  இருவேறு நிலையையும் கொண்டவர்கள் உள்ளனர்.

நம்முடைய திட்டங்கள் அடித்தட்டு மக்களை மேம்படுத்த வேண்டும். இலவச பஸ் பயணம் மூலம் பெண்கள் தங்கள் சம்பளத்தை அப்படியே வீட்டுக்கு கொண்டு செல்கிறார்கள். கொரோனா காலத்தில் வேலை யின்றி முடங்கினர்.  நிறுவனங்கள் சம்பளம் கொடுக்கவில்லை. கொரோனா நிவாரணமாக முதல்வர் 4 ஆயிரம் கொடுத்தார். அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த  இதை முதல்வர் செய்தார்.

31ம் தேதிக்குள்  மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்காவிட்டால், இலவச மின்சாரம் கட் ஆகிவிடும் என செய்தி பரப்பப்படுகிறது.

சிலபேருக்கு அவதூறு பரப்ப வேண்டும் என்ற எண்ணம். அதனால் தான்  சிலர் அப்படி  செய்தி பரப்புகிறார்கள். . ஆதார் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டுக்கு போனார்கள். அவர்கள் நினைத்தபடி நடக்கவில்லை. இது நல்ல முயற்சி என்பதற்காக கோர்ட் தடை விதிக்க வில்லை. 2.67 கோடி பேர் மின் நுகர்வோர்  உள்ளனர்.  இப்போது வரை 50 சதவீதத்திற்கு மேலாக  ஆதார் இணைத்து உள்ளனர்.31 ம் தேதி வரை எவ்வளவு பேர் இணைத்து உள்ளனர் என கணக்கு வந்த பிறகு முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று முதல்வரின் உத்தரவை பெற்று தான் அடுத்த கட்ட அறிவிப்பு வரும். அதுவரை  சிலர்  அரசியல் இயக்கங்கள்  சமூக வலைதளங்களில் பரப்பும் கருத்துக்களை பொதுமக்கள்   ஏற்க தேவையில்லை.

பொங்கல் பரிசு குறித்து முதல்வர்அவர்கள் நேற்று.மகத்தான அறிவிப்பை முதல்வர் வழங்கி உள்ளார். மக்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதற்காக ரூ.1000 த்துடன் சில பொருட்களையும் முதல்வர்  அறிவித்து உள்ளார். கரும்பும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

அமைச்சர் உதயநிதி வழங்கும் நலத்திட்ட உதவிகளில் வழக்கமாக என்னென்ன உதவிகள் வழங்கப்படுமோ அவை தயாராக இருக்கிறது. அவை வழங்கப்படும். அத்துடன் அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருப்பதால்  அந்த துறை சார் ந்த நலத்திட்டங்கள் அதிக அளவில் இடம் பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *