Skip to content
Home » பி.டி. சாராக ஹிப்ஹாப் தமிழா ஆதி…. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

பி.டி. சாராக ஹிப்ஹாப் தமிழா ஆதி…. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

  • by Senthil

பிரபல இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். ஆதியின் 7வது படமாக உருவாகும் இந்த படத்தை   ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

pt sir

விளையாட்டு கதைக்களம் கொண்ட இப்படத்தில் கனகவேல் என்ற கதாபாத்திரத்தில் பி.டி வாத்தியராக ஆதி நடித்து வருகிறார். இந்த படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மாதேஷ் மாணிக்கம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தில் காஷ்மீரா கதாநாயகியாகவும், இயக்குனர் பாண்டியராஜன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளது. ‘பி.டி. Sir’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!