விடுதலை சிறுத்தைகள் கட்சித் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். இந்த பேச்சு குறித்து திருமாவளவனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆதவ் அர்ஜூன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என பத்திரிகையாளர்கள் தொடர்ந்து எழுப்பிய கேள்விகளுக்கு, இது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என திருமாவளவன் கூறிவந்தார்.
இந்த நிலையில், இன்று ஆதவ் அர்ஜூனாவை 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்து திருமாவளவன் நடவடிக்கை எடுத்து உள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளார்.