தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது:
விஜய் இனி தளபதி இல்லை. வெற்றி தலைவர் என அழைக்க வேண்டும்(விசில் சத்தம்) 72ல் எந்த ராமச்சந்திரன் திமுகவை எதிர்த்து கட்சித்தொடங்கினாரோ அவரது பெயரில் உள்ள மண்டபத்தில் நமது பொதுக்குழு நடக்கிறது. உட்கட்டமைப்போடு தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம். உங்களுக்கு ரிட்டயா்டு கொடுக்க போகிறோம்.
70 வருட அரசியலுக்கு விடைகொடுக்கபோகிறோம். தேர்தலில் நாம் ஒரு பெரிய சேலஞ்ச் ஆக இருக்கப்போகிறோம். மாநில அரசுடைய ஜனநாயகத்துக்கு எதிரான போராட்டம்,
ஊழல் அமைச்சர்கள், ஊழல் குடும்பத்தை எதிர்க்க தூக்கி எறிய தயாராகி விட்டோம். திமுக ஊழல் ஆட்சி, நமக்கு கொள்கை எதிரி பாஜக.
முதல்வர் ஆகக்கூடிய தகுதி நம் தலைவருக்கு இருக்கு. செல்வாக்கு இருக்கு. மக்களை அவர் 24 மணி நேரம் சந்திப்பதற்கு முன்பே இப்படி இருக்கிறது. சந்தித்தால், என்னுடைய தலைவரை நோக்கி மக்கள் வரும்போது எப்படி இருக்கும்.
தமிழக வெற்றிக்கழகத்தை எப்படி உடைக்கணும், பொய் பிரசாரம் செய்யணும் என பார்க்கிறார்கள். திமுக தான் அண்ணாமலையை உருவாக்கி உள்ளது. திடீரென்று ஒரு ஆள் சம்பந்தம் இல்லாம பேசுகிறார். திமுகவை எதிர்த்து நாங்கள் பேசுகிறோம். அவர் நம் தலைவரின் தொழிலை பற்றி பேசுகிறார். தலைவர் செய்யும் தொழில் 15 மணி நேரம், 17 மணி நேரம் செய்யும் வேலை,மக்களுக்காக வேலை செய்கிறார்கள்.
அண்ணா பல்கலை விவகாரத்தில் நாங்கள் போராடும்போது சட்டையை கழற்றி சாட்டையை எடுத்து அடிக்கிறார் அண்ணாமலை. பிஜேபி தலைவரையே திமுவினர் சரி செய்து விட்டார்கள். மோடியும், அண்ணாமலையும் பல்வேறு அரசியல் விஷயங்களை திசை திருப்புகிறார்கள். அரசியலை வைத்து சம்பாதித்தால் அது ஊழல்தான்.
பெண்களைப்பற்றி விமர்சித்தால் தூக்கி எறியப்படுவீர்கள். 2026ல் இளைஞர்கள் புதிய முடிவு எடுப்பார்கள். அண்ணா, பெரியார் கொள்கைகளை நிறைவேற்றிய ஒரே தலைவர் விஜய் தான். திமுக தான் சாதியை வைத்து அரசியல் செய்கிறது.
தலித் மக்களை மனிதனாக பாருங்கள். எந்த சாதியாக இருந்தாலும் பரவாயில்லை. மனிதத்தை நேசியுங்கள். காவல்துறை கை கட்டப்பட்டு உள்ளது. காவல்துறையை இயக்கும் அதிகாரம் தான் தவறு செய்கிறது. கூட்டணியை பிறக பார்த்துக்கொள்ளலாம். மக்கள் பிரச்னையை இப்போது பேசுவோம்.
தொழிலாளர்கள் நலனுக்காக அரசியலை தாண்டி குரல் கொடுப்போம். வேங்கைவயல் பிரச்னைக்கு விஜய் தீர்வு காண்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.