திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள ஆர்எம்எஸ் ஆதார் சேவை மையத்தில், அனைத்து விதமான ஆதார் சேவைகளும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், பின்னர் மாலை 3மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு திருச்சி ஆர்.எம்.எஸ். முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.