திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூர் என்ற கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் தபால்கள், ஆதார் அட்டைகள் கொட்டிக்கிடந்தன. சுமார் 100 ஆதார் அட்டைகள், 100க்கும் மேற்பட்ட தபால்கள் அங்கு கிடந்தன. இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக தபால் நிலையத்துக்கும், கிராம அதிகாரிக்கும் தகவல் தெரிவித்தனர்.
தபால் நிலைய அதிகாரிகள் வந்து அவற்றை சேகரித்து சென்றனர். அந்டத தபால்கள் மற்றும் ஆதார் அட்டைகள் பூவாளூர் மக்களுக்கு வழங்கப்பட வேண்டியவை என்பது தெரியவந்தது. அவற்றை உரியவர்களிடம் கொடுக்காமல் எப்படி குப்பையில் கொட்டினர் என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து அந்த பகுதி தபால் ஊழியர்களிடம் அஞ்சல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகிறார்கள். . இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.