தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை ஆர் எம் எஸ் காலனி பெரியார் தெருவை சேர்ந்த தங்கராசு என்பவரின் மகன் சுகுமார் (32). இவர் கடந்த 16ஆம் தேதி மதியம் தனது பைக்கை வீட்டின் வாசல் பகுதியில் நிறுத்தி வைத்திருந்தார். வீட்டிற்குள் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுகுமார் பல இடங்களிலும் பைக்கை தேடி பார்த்தார். ஆனால் பைக் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுகுமார் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில் சுகுமார் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த பைக்கை திருடியது தஞ்சாவூர் பர்மா காலனி விளார்ரோடு பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் மகன் கரண் (23) என்பது தெரியவந்தது. இதை எடுத்து போலீசார் கரணை கைது செய்து அவரிடமிருந்து பைக்கை மீட்டனர்.