Skip to content

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது…கஞ்சா விற்ற பெண் கைது.. திருச்சி க்ரைம்….

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

திருச்சி புத்தூர் நடு வண்ணாரப்பேட்டை மாரியம்மன் கோவில்தெரு பகுதியில் சிலர் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக திருச்சி அரசு மருத்துவமனை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையத்து சப் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்பொழுது இரண்டு வாலிபர்கள் சந்தேகத்துகிடமாக நின்று கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது அதில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிறகு பிடிபட்ட நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்தபோது அதே பகுதியை சேர்ந்த சதாசிவம் (வயது 20 )என்பது தெரிய வந்தது.மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது போதை மாத்திரை விற்பனை செய்ய வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சதாசிவத்திமிடருந்து இருந்து போதை மாத்திரை மற்றும் சிரஞ்சி போன்ற பொருட்களை பறிமுதல் செய்து உள்ளனர். இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து சதாசிவத்தை கைது செய்துள்ளனர். தப்பு ஓடிய புத்தூர் பகுதியை சேர்ந்த ரஸ்கான் என்பவரை தேடி வருகின்றனர்.

எடமலைப்பட்டி புதூரில் முதியவர் மாயம்

திருச்சி எடமலைப் பட்டி புதூர் கிராப்பட்டி 11வது கிராஸ் அண்ணா நகரை சேர்ந்தவர் முருகன் இவர் ஒரு தனியார் பிரிண்டிங் பிரசில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கடைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்து எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது மகன் உதயகுமார் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனைத் தேடி வருகின்றனர்.

கஞ்சா விற்ற பெண் கைது.

திருச்சி ஏப் 16 – திருச்சி எடமலைப்பட்டிபுதுார், மில் காலனி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனை மேற்கொண்ட போது ராம்ஜி நகரைச் சேர்ந்த சுந்தரம் மனைவி ஜெயா (வயது25) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.450 கிராம் மதிப்புள்ள 45 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!