திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிம்மனபுதூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் இவருடைய மனைவி ராஜேஸ்வரி இவருக்கு பாலாஜி என்ற மகனும் மற்றொரு பெண் பிள்ளையும் உள்ளன. வெங்கடேசன் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து உள்ளார் மேலும் பெண் பிள்ளைக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தாய் ராஜேஸ்வரி மற்றும் மகன் பாலாஜி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து கடந்த 1ஆம் தேதி பாலாஜி அவரது தாயார் கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டைக்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது சிங்காரப்பேட்டை மகனுர்பட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் மதிய உணவிற்காக பரோட்டா வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது இரண்டு பேரும் பரோட்டாவை சாப்பிட்டுள்ளனர் இந்த நிலையில் இரண்டு பேருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு விழுந்துள்ளனர். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அப்போது மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து ராஜேஸ்வரியும் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்தச் சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டு வாலிபர் உயிரிழந்து தாய் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..