திருச்சி மேலசிந்தாமணி சக்தி இல்லம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் ( 37 ). இவர் இ.ஆர். பள்ளி அருகாமையில் நடந்து சென்றார்.
அப்போது அங்குள்ள ஒரு ஓட்டல் முன்பு படுத்திருந்த முதியவரிடம் ஒரு வாலிபர் தகராறு செய்தார். இதனை வடிவேலு தனது செல்போனில் படம் பிடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் வடிவேலை கீழே தள்ளி தாக்கிவிட்டு தப்பிச் சென்றார் . இது குறித்து பாதிக்கப்பட்ட வடிவேல் கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வடிவேலை தாக்கிய லால்குடி மகிழம்பாடி இருளூர் தெரு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (19 )என்ற வாலிபரை கைது செய்தனர்.
