கோலை, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில்லிக் கொம்பன் என்ற ஒற்றை யானை சுற்றி திரிந்தது. நவமலை பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் ஆழியார் – வால்பாறை சாலையில் அவ்வப்போது உலாவரும் இந்த காட்டு யானை அப்பகுதியில் உள்ள வாகனங்கள் மற்றும் குடியிருப்புகளை தொடர்ந்து சேதப்படுத்தியது.
இந்நிலையில் வனத்துறையினர் ஒற்றைக் காட்டு யானையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
பின்னர் யானை கேரளப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக சில்லி கொம்பன் ஒற்றை யானை நவமலை பகுதிகளில் தென்படுகிறது. இந்நிலையில் நவமலை அருகே மின்வாரிய குடியிருப்புகள்
மற்றும் மலைவாழ் குடியிருப்பு உள்ளதால் நவமலை செல்லும் சாலையில் சில்லி கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை ஒய்யாரமாக உலா வருவதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதனை அடுத்து ஒற்றை காட்டு யானை சாலையில் வருவதால் வனத்துறையினர் சுழற்சி முறையில் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
மேலும் இவ்வழியாக பயணிக்க கூடிய மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.