ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வன சரக பகுதிக்கு உட்பட்ட கவி அருவி, ஜீரோ பாயிண்ட், நவமலை, ஆழியார், வால்பாறை சாலை, ஆதாளியம்மன் கோவில் பகுதிகளில் வன விலங்குகள் அதிக நட மாட்டம் உள்ள பகுதியாகும். வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வாகனங்கள் கொண்டு சூழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கேரளா நெல்லியம்பதி வனப்பதிலிருந்து வந்த சுள்ளி கொம்பன் பட்டர்பிளை பார்க் மற்றும் ஆழியார் அணை ஓரம் மற்றும் பிற பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடி வருகின்றது. இதையடுத்து நவமலை மின் சார ஊழியர்கள் குடியிருக்கும் பகுதி வந்த காட்டு யானை இரவில் நடமாடுவதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.