கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தமிழக -கேரள எல்லையை ஒட்டி உள்ளதால் பொள்ளாச்சி ஆனைமலை வழியாக ரேஷன் அரிசி கடத்தல், கனிமவள கடத்தல், உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் ஆனைமலை அருகே உள்ள வேட்டைக்காரன் புதூர் பகுதியில் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியை கிராம மக்கள் சிறைப்பிடித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சி ஆனைமலை வழியாக கேரளாவிற்கு கருங்கற்களை ஏற்றிச் சென்ற கனிமவள லாரி பிடிபட்டுள்ளது.
இதுகுறித்து ஆனைமலை காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து அதிகாரிகள் அதிக பாரம் கொண்ட கனிமவள லாரியை கைப்பற்றி எடை மேடைக்கு கொண்டு சென்றனர். 60 டன் எடை மேடைக்கு கொண்டு செல்லப்பட்ட பிடிப்பட்ட கனிம வள லாரி அதிக பாரம் இருந்ததால் எடை மேடையில் கணக்கீடு செய்ய முடியவில்லை. இதனால் 100 டன் கெப்பாசிட்டி உள்ள எடை மேடைக்கு சென்று எடை பார்த்ததில் 60 டன் 500 கிலோ இருந்துள்ளது இதனை தொடர்ந்து அதிக பாரத்துடன் டிப்பர் லாரியை இயக்கி வந்த ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .பெரும்பாலும் இரவு நேரங்களில் பொள்ளாச்சி ஆனைமலை வழியாக கடத்தல் குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதால் போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தி உள்ளனர்