கரிக்காலி பகுதியில் இருந்து பாலக்காட்டிற்கு டாரஸ் லாரி மூலம் சிமெண்ட் லோடுகளை ஏற்றிக்கொண்டு மோனச்சன் (58) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்பொழுது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி டு பாளையம் செல்லும் சாலையில் உள்ள வலையம்பட்டி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது லாரியின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதனை பார்த்த டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்தி கீழே இறங்கி பார்த்தபொழுது லாரி தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதுகுறித்து அருகில் இருந்த பொதுமக்கள் தீயணைப்புத்
துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீரை பீச்சி அடித்து பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் லாரி முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரியில் தீ பற்றி எரியை தொடங்கியதும் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு டிரைவர் கீழே இறங்கியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.