திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வரும் 40 வயதுடைய பெண் ஒருவர். தனது பணி முடிந்ததும் வீட்டிற்கு நடந்து சென்றும் கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த கல்லக்குடி அருகே உள்ள மால்வாய் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் கோகுல் என்பவர் திடீரென செவிலியரை வழிமறித்து அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதிர்ச்சியடைந்த செவிலியர் நர்சை கூச்சலிடவே அந்த வழியாக சென்றவர்கள் செவிலியரை காப்பாற்றி சிகிச்சைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெண் செவிலியர் கொடுத்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கோகுலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.