தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா சோழபுரம் கீழத்தெருவில் வசிப்பவர் கேசவமூர்த்தி (47). கும்பகோணம் அருகே சோழபுரம் மணல்மேடு கிராமத்தை சேர்ந்த 27 வயது அசோக் ராஜனை, இந்த கேசவமூர்த்தி என்பவர் கொலை செய்துவிட்டார்.
முறைப்படி வைத்தியம் படிக்காத இவர், அரைகுறை வைத்தியத்தை வைத்தே 50-க்கும் மேற்பட்டோருக்கு சுன்னத் செய்திருக்கிறார். அப்படித்தான் அசோக் ராஜனுக்கும் சுன்னத் செய்துள்ளார். ஆனால், சிகிச்சை தவறாகிவிட்டது. இதனால், அசோக்குக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகவும், கேசவமூர்த்தியிடம் இதை பற்றி கேட்டுள்ளார். அப்போதுதான் விவகாரம் துவங்கியிருக்கிறது. இதுபோக, கேசவமூர்த்திக்கு “ஓரினச்சேர்க்கை” உறவு பழக்கம் இருந்திருக்கிறது. தன்னிடம் சிகிச்சை வந்த அசோக் ராஜனிடமும் ஓரின சேர்க்கை உறவுக்கு கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால், அசோக் இதற்கு மறுத்துள்ளார். இந்த ஆத்திரத்தில் நீண்ட நேரம் பாலியல் உறவுகொள்ள வீரியம் மிக்க மருந்து என சொல்லி மருந்து ஒன்றை கொடுத்து அசோக்கை கொன்றுள்ளார்.
அப்போது, ஏராளமான எலும்புகள் கிடப்பதை கண்டு உறைந்து போனார்கள். அசோக் போலவே, மேலும் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட போலீசார், கேசவமூர்த்தி வீட்டில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி ஆய்வு செய்தார்கள். முதலில் ஒரு மண்டை ஓடு கிடைத்தது.. அந்த மண்டை ஓடு, சோழபுரத்தில் கடந்த வருடம் காணாமல் போன அனஸ் என்பவரது என்பது உறுதியானது.
இதையடுத்து, கடந்த 2 நாட்களாகவே, தஞ்சை மாவட்ட எஸ்பி முன்னிலையில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. சித்த வைத்தியரின் வீட்டின் பின்புறம் முழுக்கவும் தோண்டியெடுக்க உத்தரவிடப்பட்டு, அந்த வேலையும் நடந்து வருகிறது. போலி டாக்டர் கேசவமூர்த்திக்கு திருமணமாகி, 2 மனைவிகள் இருக்கிறார்கள். 2 பேருமே அவருடன் வாழாமல் பிரிந்து போய்விட்டார்களாம். கேசவமூர்த்தி எப்போதுமே, இளைஞர்களுடன் நெருக்கமாகப் பழகி, அவர்களுடன் உறவு கொள்வாராம். இவர் உறவு கொண்ட பல இளைஞர்களை காணவில்லையாம்.
பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு கேசவமூர்த்தியின் வீட்டின் முன்பகுதி மற்றும் கொல்லைபுறத்தில் இருந்த மூலிகைச்செடி உள்ளிட்ட வாழை மரங்கள் அனைத்தையும் போலீசார் அகற்றினர். 3 அடிக்கு மட்டும் பள்ளம் தோண்டி பார்த்தபோது 30க்கும் மேற்பட்ட துண்டுகளாக விரல் அளவிலான எலும்புகள் கிடைத்திருக்கிறது. இதில் சேகரிக்கப்பட்டவை எல்லாம் முகமது அனஸ் உடல் பாகங்களா? அல்லது வேறு இளைஞர்களின் எலும்புகளா? என்று அறிய ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதைத்தவிர, கேசவமூர்த்தி வீட்டில் இருந்த ஏகப்பட்ட மருந்து மாத்திரைகள், மூலிகை பொடிகள் கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, பெண்கள் பயன்படுத்தும் நகைகள் மற்றும் பயன்படுத்தாத பொருட்கள் கிடைத்திருக்கின்றன. இதைத்தவிர, பெண்களின் நைட்டி, டிரஸ்கள் போன்றவையும், கேசவமூர்த்தியின் வீட்டில் கிடைத்திருக்கிறது. அனைத்தையும் 10க்கும் மேற்பட்ட பெட்டிகளில் போட்டு, போலீசார் எடுத்து சென்றிருக்கிறார்கள். இதெல்லாம் யாருடையது என்று தெரியவில்லை.. ஆனால்,நாளுக்கு நாள் கும்பகோணம் சம்பவம் தமிழகத்துக்கே அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.