சென்னை, அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை சாலை வழியாக இன்று அதிகாலை 4 மணிக்கு கொரட்டூர் செல்லக்கூடிய தொழிற்பேட்டை பகுதியில் சாலையோரம் சுமார் 9 அடி நீளம் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. அப்போது அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். இதுகுறித்து ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்கள் உடனடியாக தீயனைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு மீட்பு நிலையத்தில் பணியிலிருந்த சிறப்பு நிலைய அலுவலர் புஷ்பாகரன் மற்றும் தீயணைப்பு வீரர் அருள் பிரகாசம் மற்றும் 6 பேர் கொண்ட குழுவினர் விரைந்து வந்து மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை புறநகர மாவட்ட அலுவலர் தென்னரசு உத்தரவின்படி கிண்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்ல அம்பத்தூர் பகுதி ஸ்நேக் கேட்ச்சர் கணேசனிடம் ஒப்படைத்தனர். தற்பொழுது கொட்டி தீர்த்த மிக்ஜாம் புயல் கனமழையின் பொழுது செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே முதலை பிடிப்பட்டது. தற்போது அம்பத்தூரில் 9 அடி நீள மலைப்பாம்பு குடியிருப்பு பகுதியில் நுழைவதற்குள் பத்திரமாக பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது