Skip to content
Home » கரூர்-கிருஷ்ணராயபுரம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து….

கரூர்-கிருஷ்ணராயபுரம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து….

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை ரயில்வே மேம்பாலத்தில், நள்ளிரவு கும்பகோணத்தில் இருந்து கோயம்புத்தூர் சென்று கொண்டிருந்த தனியார் (Essaar) சொகுசு பஸ் அதிக வேகமாக வந்து மேம்பாலத்தில் ஏறி இறங்கியுள்ளது. அப்போது சொகுசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சென்டர் கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அந்த தனியார் சொகுசு பேருந்தில் டிரைவர் கிளீனர் பயணிகள் எட்டு பேர் என பத்து பேர் மட்டும் பயணித்துள்ளனர் இதில் பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தேசிய

நெடுஞ்சாலை நடுவில் பேருந்து கவிழ்ந்ததால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லாலாபேட்டை போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பெரிய கிரேனை கொண்டு பேருந்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து தனியார் சொகுசு பேருந்து ஓட்டுனர் ஆன கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜீவானந்தரத்திடம் லாலாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.