கோவை, கணபதி காந்தி மாநகர் வ.உ.சி் நகர் பேருந்து நிறுத்தம் அருகே பா.ஜ.க. கொடி கம்பம் உள்ளது. இன்று அங்கு வந்த மர்ம நபர் திடீரென கொடிக் கம்பத்தில் இருந்த பா.ஜ.க., கொடியை கீழே இறக்கி கத்தியால் அறுத்து உள்ளார். பிறகு கட்சி கொடிக்கு தீ வைத்து எரித்து உள்ளார் . இதனைப் பார்த்த பா.ஜ.க வை சேர்ந்த சிலர் கொடியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பிறகு அந்த நபரிடம் கொடிக்கு தீ வைத்தது குறித்து கேள்வி எழுப்பினர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்து ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் குறித்து உடனே சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சரவணம்பட்டி போலீசார் பா.ஜ.க கொடியை எரித்தது தொடர்பாக விசாரணை நடத்தினர். கட்சி கொடியை எரித்த நபர் யார் ? எதற்காக எரித்தார் ? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர் . இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பா.ஜ.க கொடியை தீ வைத்து எரித்த சம்பவம் கோவையில் பா.ஜ.க வினர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க கொடியை தீ வைத்து எரித்த நபர்… கோவையில் பரபரப்பு….
- by Authour
