தஞ்சை அருகே அடஞ்சூர் பாதை பகுதியில் சைக்கிளில் சென்ற இளைஞர் மீது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதியதில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பொன்னுராமன் என்பவரின் மகன் முத்துராமன் (48). இவரது மனைவி சியாமளா. மகன் நித்தீஷ் (17). நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் வீட்டிலிருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அடஞ்சூர் பாதை அருகே பின்னால் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் முத்துராமன் சென்ற சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்துராமன் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் முத்துராமனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி முத்துராமன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முத்துராமனின் மகன் நித்திஷ் திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.