Skip to content

தண்ணீர் தொட்டி மேல் ஏறிய மனநலம் பாதிக்கப்பட்டவர்.. தீயணைப்பு துறை மீட்பு…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பக்கோதி பாளையத்தில் வசிக்கும் சதீஷ் 32 வயது உடையவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டது இதையடுத்து சதீஸ் குடும்பத்தார் சதீஸ்யை வீட்டை விட்டு வெளியே விடாமல் பாதுகாத்து வந்தனர், ஆனால் சதீஸ் அவ்வபோது வீட்டை விட்டு வெளியேறி அருகில் இருக்கும் மரங்கள் வீட்டின் மேல் ஏறி கொள்வார் இந்நிலையில் சதீஸ் தனது வீட்டின் அருகில் இருந்த தண்ணீர்

தொட்டியில் ஏறி கண்களை கட்டி கொண்டு தான் கீழே குதிப்பதாக கூறியுள்ளார் இதையடுத்து கிராம மக்கள் கோட்டுர் காவல்நிலையத்துக்கும், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து உள்ளனர், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீர் தொட்டி மேல் ஏறி சதீஸ் யை கயிறு கட்டி கீழே இறக்கி மீட்டனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பக பேசப்படுகிறது.

error: Content is protected !!