திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து ( 78 ) . சர்க்கரை மற்றும் பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்ட மருதமுத்துக்கு பீடி குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு படுக்கையில் படுத்து கொண்டு பீடி குடித்துள்ளார். பின்னர் அந்த அணைக்காத பீடி குச்சியை வெளியே வீசியபோது அவருக்கு தெரியாமல் அவர் படுக்கையிலேயே விழுந்துள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத மருதமுத்துவின் படுக்கையில் தீப்பிடித்தது. இதில் படுங்காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் மருதமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மகள் நாகலட்சுமி தில்லை நகர் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.