Skip to content
Home » வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது

வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது

  • by Senthil

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

வடமேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணிநேரத்தில், இது மேலும் வலுவடைந்து தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா, தெற்கு சட்டீஸ்கர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.  இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!