திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர் காந்தி தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் இவரது மகன் முகேஷ் வயது 23 பி சி ஏ பட்டப்படிப்பு முடித்துள்ள இந்த வாலிபர் பகுதிநேர வேலையாக ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மேலும் அரசு வேலைக்காக ஒரு அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். அவரது தந்தை மகனிடம் பகுதி நேர வேலையை விட்டுவிட்டு நல்ல ஒருவேலைக்கு போக சொல்லி கண்டித்துள்ளார். இதில் மனஉளைச்சலான முகேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து அவரது தந்தை பொன்மலை போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலைக்கு போக சொன்ன தந்தை… பட்டதாரி வாலிபர் தற்கொலை… திருச்சியில் சம்பவம்..
- by Authour
