Skip to content

நாட்றம்பள்ளி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை… உறவுக்காரர் போக்சோவில் கைது…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம்,  நாட்றம்பள்ளி அடுத்த புள்ளாநேரி பகுதியில் வசிப்பவர் மணி என்பவரது மகன் தமிழ்மணி(35). இவர் அதே பகுதியில் தன்னுடைய வீட்டின் எதிரே வசிக்கும் உறவுக்கார சிறுமியிடம் சுமார் ஒரு மாத காலமாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில் எட்டாம் வகுப்பு பயிலும் 13 வயது சிறுமி ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு பாலியல் சீண்டலின் தொந்தரவு தாங்க முடியாமல் வேறு வழியின்றி வீட்டில் இருக்கும் தன்னுடைய பாட்டியிடம் நடந்த விபரங்களை கூறியுள்ளார்.

இது கேட்டு அதிர்ச்சி அடைந்த பாட்டி சிறுமியின் பெற்றோரிடம் கூறியதன் அடிப்படையில் அவர்கள் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழ்மணியை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!