சென்னை நங்கநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடு குடியிருப்பில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஒரு தம்பதியின் மகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது அந்த சிறுமி குடியிருப்பின் வாசலில் உள்ள கேட்டை திறந்து மூடியுள்ளார். சிறுமி கேட்டை மூடியபோது சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. கேட் விழுந்ததில் படுகாயம் அடைந்த அந்த சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அடுக்குமாடி குடியிருப்பின் கேட் சரிந்து விழுந்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் சிறுமி பலி.. சென்னையில் பரிதாபம்…
- by Authour
