Skip to content

திருப்பத்தூர் அருகே மற்றவர்களுடன் மது அருந்திய நண்பனை கத்தியால் குத்திய வாலிபர்..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் ராமன்(26) பெயிண்டர் தொழில் செய்து வருகிறார்.இவரும் அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் ராகுல் (25) இருவரும் நண்பர்கள் எப்போதும் ஒன்றாக சுற்றி வருவது மேலும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது என இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் ராமன் இன்று ராகுலுக்கு தெரியாமல் மற்றொரு நண்பனுடன் சேர்ந்து ஆதியூர் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ராகுல் அங்கு சென்று ராமனிடம் என்னை விட்டுவிட்டு இங்கு வந்து எதற்காக குடிக்கிறாய் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென ராகுல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். பின்னர் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ராமனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிர்கள் ஆபத்தான நிலையில் ராமன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தப்பி ஓடிய ராகுல் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தனது நண்பன் மற்றொரு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!