கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கன்பட்டி என்று சிறிய ஊரில் சரோஜா என்ற பெண்மணி இயற்கை விவசாயம் செய்து வருகிறார் மேலும். விவசாயம் மட்டுமல்லாமல் தான் உற்பத்தி செய்த விவசாயப் பொருட்களை வெற்றிகரமாக மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருகிறார்.
அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதி மிகுந்த வரண்ட பகுதியாகும். பெரும்பாலும் முருங்கை சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. நமக்கு தேவையான பழங்களை நாமே உற்பத்தி செய்யும் என்ற நோக்கில் தற்போது 10 ஏக்கர் பரப்பளவில் நெல்லி, கடுக்கான், விலா , அத்தி,
நாவல், இலுப்பை, கொய்யா, சப்போட்டா, மாதுளை உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். (Permaculture ) உளவில்ல மேலாண்மை செய்வதால் சாகுபடி சிறப்பாக உள்ளது.
உணவுக் காடு, உழவில்லாத வேளாண்மை -என்ற நோக்கத்தில் இதனை எல்லாம் கடந்து வெற்றிகரமாகப் பொருளாதார ரீதியாக லாபமீட்டி வருகின்றார். அவர் நிலத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மதிப்புக்கூட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். முருங்கையிலிருந்து எண்ணெய், தேங்காயிலிருந்து சோப்பு என பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து. சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சியையும் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த ஹென்றி அலெக்சாண்டர் நாடக கலைஞராக உள்ளார். இவர் ஐரோப்பிய மற்றும் பிரான்ஸ் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையில் நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். இந்நிலையில் இந்தியா முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார்.
முதல் முறையாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்து இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள பெண்மணி விவசாயம் செய்வதை சமூக வலைதளங்களில் பார்த்து ஆர்வம் அடைந்த அவர் லிங்கமநாயக்கன்பட்டி பகுதியில் விவசாயம் செய்து வரும் சரோஜாவை நேரில் பார்த்து இயற்கை விவசாயம் குறித்து கேட்டறிந்து எப்படிப்பட்ட முறையில் விவசாயம் செய்வது என ஏழு நாள் தங்கி பயிற்சி பெற்று வருகிறார். கற்றுக்கொண்ட அனைத்தையும் பிரான்ஸ் நாட்டில் விவசாயம் செய்ய உள்ளதாக கூறினார்.