ஊட்டியை அடுத்த குன்னூர் ஹை பீல்டு பகுதியில் உள்ள யூகலிப்ட்ஸ் தைலம் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலையில் உள்ள பொருட்கள் தீ பற்றி எரிந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். மேலும் குன்னூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இரவு நேரம் என்பதால் தொழிலாளர்கள் யாரும் அங்கு இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் அங்கிருந்த தைலம் தயாரிக்க பயன்படும் பொருட்கள் தீயில் எரிந்து கருகியது. இந்த தீ விபத்து தெடர்பாக குன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/06/fire-accident-930x486.jpg)