Skip to content

லோன் வசூலிக்க சென்ற பைனான்ஸ் ஊழியர்…. நாய் விட்டு கடிக்க வைத்த பெண் கைது

  • by Authour

கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தர்ஷனா(எ) பிரியா (29). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பைனான்ஸ் மூலம் கார் வாங்கி உள்ளார். கடந்த 20 மாதங்களாக காருக்குரிய மாதத் தவணையை செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனியார் பைனான்ஸ் நிறுவனத்தினர் தர்ஷனாவை தொடர்பு கொண்டு பணத்தை செலுத்துமாறு கேட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் அந்தப் பகுதியைச் சேர்ந்த தனியார் பைனான்ஸ் நிறுவன கலெக்ஷன் ஏஜென்ட் ஜெகதீஷ் மற்றும் பைனான்ஸில் நிறுவனத்தின் ஏரியா மேனேஜர் சரவணன் மற்றும் சுரேஷ் ஆகியோர் தர்ஷனாவின் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டுள்ளனர். அப்போது தர்ஷனாவிற்கும் பைனான்ஸ் நிறுவனத்தாருக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. மேலும் தர்ஷனா பணத்தை கொடுக்காமல் தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்து உள்ளார்.

தொடர்ந்து வளர்ப்பு நாயை கழற்றி விட்டு பைனான்ஸ் நிறுவனத்தார்களை கடிக்க செய்துள்ளார். நாய் கடித்தத்தில் காயமடைந்த பைனான்ஸ் நிறுவனத்தினர் அங்கு இருந்து தப்பி ஓடினர். பின்னர் அவர்கள் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் மணிகண்டனின் மனைவி தர்ஷனா என்கிற பிரியா (29) என்ற இளம் பெண்ணை கைது செய்த போலிசார் சிறையில் அடைத்தனர். நாய் கடியால் காயமடைந்த பைனான்ஸ் ஊழியர்கள் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!