திருச்சி மாவட்டம் லால்குடி வந்தலை கூடலூர் பகுதியை சேர்ந்த வெற்றிச்செல்வன்(45), விவசாயி. இவருக்கு சொந்தமான இடத்தினை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விட்டார்களாம். இதுகுறித்து பலமுறை வெற்றிச்செல்வன், தாசில்தார் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் வெறுப்படைந்த வெற்றிச்செல்வன் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்தார். தான் மறைத்து எடுத்து வந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றாார் வெற்றிச்செல்வன். இதனை சரியான நேரத்தில் கவனித்த காவல்துறையினர் வெற்றிச்செல்வனை பிடித்து அவர் தீக்குளிக்காதபடி தடுத்து நிறுத்தி, அவரை விசாரணைக்க அழைத்துச்சென்றனர். அங்கிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
