Skip to content

கார் உரசியதில் தகராறு… டிராபிக் போலீஸ் முன்பு வாலிபருக்கு சரமாரி அடிஉதை…

சென்னை, பூந்தமல்லி டிரங்க் சாலை, பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் ஒன்றோடு ஒன்று உரசி கொண்டது இதில் இரண்டு கார்களையும் ஓட்டி வந்தவர்கள் கீழே இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதே இடத்தில் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசாரும், பொதுமக்களும் இருவரையும் மடக்கிவிட்ட நிலையில் காரை தூரம் தள்ளி நிறுத்துமாறு போக்குவரத்து போலீசார் கூறிய நிலையில் காரை ஓட்டி வந்த நபர் காரை நிறுத்திய நிலையில் மற்றொரு காரில் வந்த நபர்கள் வேகமாக

சென்று அந்த நபரை ஒரு கட்டத்தில் போக்குவரத்து போலீசார் முன்னிலையில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்ட நிலையில் வாலிபரை தாக்கிய நபர்கள் அங்கிருந்து நைசாக நழுவி சென்றனர். இதையடுத்து அடி வாங்கிய நபர் அங்கிருந்து கிளம்பி சென்றனர். போக்குவரத்து போலீசார் முன்னிலையில் வாகனத்தை ஓட்டி வந்த நபர்கள் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!