தைப்பொங்கல் திருநாளான இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இன்றைய ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 20க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் 3 போலீசார் காயமடைந்தனர். இதில் மாடு நெஞ்சில் முட்டியதில் காயமடைந்த மாடுபிடி வீரரான விளாங்குடியைச் சேர்ந்த நவீன் (21) ரத்த காயத்துடன் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.