கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று செல்லாண்டியம்மன் கோவிலில் காலை கிடா வெட்டுதல் மற்றும் சேவல் பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில் கோவையில் உள்ள ஒரு (psg)தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஏ 2-ஆம் ஆண்டு படித்து முடித்து மூன்றாம் ஆண்டு படிக்க இருந்த கோவையைச் சேர்ந்த ஸ்ரீ ஹரிராம் (19) மற்றும் அவரது நண்பர்கள்4 பேருடன் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவுக்காக நொய்யல் அருகே மறவாபாளையத்தில் உள்ள இவர்களது நண்பன் தீபக் (28 )என்பவர் வீட்டிற்கு வந்திருந்தனர்.
இந்நிலையில் மதியம் ஸ்ரீ ஹரிராம் மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் மறவாபாளையம் பகுதியைச் சேர்ந்த தீபக் ஆகிய 5 பேர் மறவாபாளையம் பகுதியில் உள்ள காவேரி ஆற்றுக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஸ்ரீ ஹரிராம் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீருக்குள் திடீரென மூழ்கி விட்டார். அவருடன் குளித்து கொண்டிருந்த சக நண்பர்கள் பார்த்தபோது ஸ்ரீ ஹரிராமை காணவில்லை. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து காவேரி ஆற்றுக்குள் இறங்கி ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடி கல்லூரி மாணவன் ஸ்ரீ ஹரிராமை சடலமாக மீட்டனர்.