திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சமயபுரம் கல்லுக்குடி பகுதியை சேர்ந்தவர் மனோகரன் இவரது மகன் ஸ்ரீ சிவாஸ் இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் ஓட்டு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வேலைக்குச் சென்ற ஸ்ரீ சிவாஸ் மதியம் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது
ஓட்டு வீட்டு விட்டத்தில் கோதுமை நாகம் ஒன்று இருந்து உள்ளது. அதை பார்த்த ஸ்ரீ சிவாஸ் இது குறித்து சமயபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வீட்டுக்கு மேலே ஏறி தேடி 6 நீளமுள்ள கோதுமை நாகத்தை பிடித்தனர். பின்னர் அருகில் உள்ள தச்சங்குறிச்சி வனப்பகுதியில் கோதுமை நாகத்தை பத்திரமாக விட்டனர்.