கோவை மாவட்டம் அன்னூர் சேர்ந்த சிவாஜி, கார்த்திக் இருவரும் தார் சாலை போடும் கூலி வேலையினை காண்ட்ராக்டர் பார்த்திபன்ராஜ் என்பவரிடம் செய்து வருகின்றனர்,சிவாஜி, கார்த்திக் இருவரும் பத்ரகாளியம்மன் கோயில் ஊத்துக்காடு ரோட்டில் தார்சாலை போடும் வேலைக்கு உடன் பத்துக்கும் மேற்பட்ட நபருடன் வந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,அங்கு வந்த நகர மன்ற துணைத் தலைவர் கௌதமன் மற்றும் பார் நாகராஜ் இருவரும் எங்கள் பகுதியில் தார்சாலையானது குண்டும் குழியுமாக உள்ளதாகவும் அதனை சரி செய்து விட்டு இந்த ரோட்டினை போடுங்கள் என வேலை செய்பவர்களிடம் பிரச்சனை செய்துள்ளனர், தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்த சிவாஜி ,கார்த்திக் இருவரையும் தகாத வார்த்தையால் திட்டி கார்த்திக் என்பவரின் கையைப் பிடித்து முறுக்கி இருவரையும் நெஞ்சில் கையை வைத்து கீழே தள்ளி விட்டு உள்ளனர்,காயம் அடைந்த இருவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,மேலும் இச்சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,நகர மன்ற துணைத் தலைவரும் கவுன்சிலர் பெரும்பாலும் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.