திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த சுரேஷ் குப்தாவை சாதியின் பெயரைச் சொல்லி திட்டினாராம்.
எனவே திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசனை எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகம் முன், அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்யவிடாமல் தடுக்கும், தில்லைநகர் உதவி ஆணையர் தங்கபாண்டியனை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று சீனிவாசன் மீது சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.