கோவை மாவட்டம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த ஹேமலதா மற்றும் இவரது மகள் திவ்யதர்ஷினி ஆகிய இருவரும் சொந்த வேலை காரணமாக இருவரும் காரில் கோவையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர் அப்போது கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலையில் சென்று கொண்டிருந்தபோது இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறம் உள்ள தென்னந்தோப்பில் உள்ள 30 அடி ஆலம்
கிணற்றுக்குள் விழுந்துள்ளது. அருகில் இருந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பத்திரமாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இருவருக்கும் சிறிதளவு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு நீரில் மூழ்கிய காரை மீட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.