கேரள மாநிலம் இடுக்கியில் இருந்து தஞ்சாவூருக்கு சுற்றுலாவிற்காக அரசு பேருந்தை வாடகைக்கு எடுத்து 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். தஞ்சாவூருக்கு சென்றுவிட்டு திரும்பிய போது புல்லுப்பாறை அருகே வளைவில் திரும்பும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது.
இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயம் அடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. விபத்து தொடர்பாக கேரள மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.