கர்நாடகாவில் ஏடிஎம் மிஷினில் நிரப்ப பணம் எடுத்து சென்ற வங்கி ஊழியர்கள் மீது கொள்ளையர்கள் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தில் இருந்து பணம் இறக்கி கொண்டிருந்தவர்கள் மீது டூவீலரில் வந்த கொள்ளையர்கள் 2 பேர் துப்பாக்கிச்சூடு நடத்தி பணப்பெட்டியை கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த மற்றொரு ஊழியர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் பீதர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.