திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் பஞ்சாயத்திற்குட்பட்ட காந்திபுரம் நொண்டி மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மகள் யோகவல்லி (15 )இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் வீட்டின் அருகே கழிவுநீர் தெங்குவதால் கொசு தொல்லை அதிகமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் யோகவள்ளியை சில தினங்களுக்கு முன்பு கொசு கடித்து நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் மேலும் இதுகுறித்து பாச்சல் பஞ்சாயத்து நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை கழிவுநீரை தேக்கி வைக்கும் நபர்கள் மீதும் ,கழிவுநீர் தேங்கும் இடத்திலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சின்னத்தம்பி மற்றும் பள்ளி மாணவி யோக வள்ளி பள்ளி சீருடையுடன் வந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவசசௌந்தரவள்ளியிடம் மனு அளித்தனர்.