கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி தமிழ்ச்சோலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி மதன்குமார் ஷீலா தம்பதியரின் மகன் ரோகித் சர்மா (6). இதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இன்று மதியம் தனது தெருவிலுள்ள ஆழ்துளை குடிநீர் குழாயை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து பள்ளி சிறுவன் சம்பவ இடத்தில் உயிரிழந்தான்.
மயங்கி விழுந்து நிலையை பார்த்து அருகில் இருந்த மூதாட்டி சத்தம் போட்டு அருகில் உள்ள ஸ்விட்ச் பாக்ஸை ஆப் செய்தார். அருகில் இருந்த கிராம பொதுமக்கள் சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த
நங்கவரம் பேரூராட்சி செயல் அலுவலர் காந்தரூபன், பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி, நகரச் செயலாளர் சுப்பிரமணி ஆகியோர்கள் சிறுவனின் சடலத்தை பார்த்து அழுதனர்.
அருகில் இருந்த கிராம பொதுமக்கள் தங்களது பகுதியில் தாழ்வான பகுதியில் சரியான படி குடிநீர் குழாய் அமைக்காமலும் தரமற்ற முறையில் மின் ஒயர் அமைக்கப்பட்டதால் சிறுவன் மின்சாரம் பாய்ந்து இறந்தார். இனிவரும் காலங்களில் தாழ்வான முறையில் தரமான மின் உரையில் அமைத்து பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அமைக்க வேண்டும் என புகார் தெரிவித்தனர். தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.