கோல்ட்’, ‘கனெக்ட்’, ‘அன்னபூரணி’ எனத் தொடர்ச்சியாகத் தான் தயாரித்தப் படங்கள் மற்றும் நடித்தப் படங்கள் என அனைத்துமே நயன்தாராவுக்கு தோல்விப் படங்களாக அமைந்தன. பாலிவுட்டில் இவர் நடித்த ‘ஜவான்’ படம் மட்டுமே வசூல் ரீதியாகப் பேசுபொருளானது.
என்னதான் பிசினஸ், தயாரிப்பு என கைவசம் தொழில்கள் இருந்தாலும் நடிப்புதான் நயனுக்கு ஃப்ர்ஸ்ட். ஆனால், இப்போது ‘டெஸ்ட்’, ‘மண்ணாங்கட்டி’ என்ற இரண்டு படங்கள் மட்டுமே அவர் கைவசம் உள்ளது. பெரிய ஹீரோக்கள் படங்களில் இவருக்கு வாய்ப்புகள் சுத்தமாக இல்லை. ஹீரோயின் சென்ட்ரிக் படங்களும் பெரிதாக போகாமல் மார்க்கெட் இழந்தார்.
அறிமுகமான மலையாள சினிமாவில் அவ்வப்போது படங்கள் நடித்து வந்தாலும் இப்போது தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் அந்தப் பக்கம் சென்றுள்ளார் நயன் என கிசுகிசுக்கப்படுகிறது.