Skip to content

டைரக்டர் ஷங்கர் மகள் திருமணம்… முதல்வர் ஸ்டாலின், ரஜினி நேரில் வாழ்த்து…

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், உதவி இயக்குநர் தருண் கார்த்திக் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் இன்று நடைபெற்றது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு கடந்த மாதமே நேரில் அழைப்பு விடுத்தார் இயக்குநர் ஷங்கர்.

இந்த நிலையில், இன்று நடந்த திருமணத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இவர்கள் மட்டுமல்லாது நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம், விஷால், அர்ஜூன், நயன்தாரா, இயக்குநர்கள் பாரதிராஜா, மணி ரத்னம், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்களும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஐஸ்வர்யா ஷங்கருக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் ரோஹித் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அதுமட்டுமல்லாமல் ரோஹித் மீது மேலும் பல குற்றச்சாட்டுகளும் எழுந்தது. இதனால், ரோஹித்திடம் இருந்து விவாகரத்து பெற்றார் ஐஸ்வர்யா. இந்த சோகத்தில் இருந்து வெளியே வந்தவர், இப்போது புது வாழ்வை தொடங்கி இருக்கிறார். இவருக்கு ரசிகர்களும் திரையுலகினரும் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

ஐஸ்வர்யா- தருண் திருமண நிகழ்வின் புகைப்படத் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!