அரியலூர் மாவட்டம், திருமானூரில் சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 15 ஆம் ஆண்டாக கோடை கால நீர் மோர் வழங்கும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் மு. வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த தங்க சண்முக சுந்தரம் கலந்து கொண்டு நீர் மோர் தயாரிக்கும் முறை பற்றி விளக்கினார்.மேலும் இது குறித்து கூறுகையில்….15 வது ஆண்டு நீர் மோர் வழங்குவதற்கு முதல் நாள் இரவே விறகு அடுப்பில் பாலை பக்குவமாக காய்ச்சி ஆறவைத்து தேவையான அளவு உறை மோர் ஊற்றி தயிராக உறைந்தவுடன் காலையில் தயிரை கடைந்து மோராக மத்தால் கடைந்து தேவையான அளவு நீர் விட்டு பெருக்கி புத்தம் புது மண்பானையில் வைத்து மண் மணக்க கருவேப்பிலை மாங்காய் மல்லித்தழைகலந்து வழங்கும் நீர் மோரானது கோடை வெயிலில் உடலில் ஏற்படும் நீர் இழப்பைத் தடுத்து உடல் குளிர்ச்சி பெறச் செய்ய உதவும் என நம் முன்னோர்கள் உணர்ந்தே கோடை காலத்தில் கோடை கால நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வுகள் தொன்று தொட்டு நடைபெற்று வருவதாக கூறினார். மேலும் ஆண்டுதோறும் இந்த நிகழ்வு 60 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்றார். சமூக செயற்பாட்டாளர்கள் தனலெட்சுமி ராஜலெட்சுமி விஜயா கோமதி ராமகிருஷ்ணன் ராஜா சதீசு லெட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நீர் மோர் விநியோகம்….
- by Authour