சிதம்பரம்(தனி) பாராளுமன்றத் தொகுதி, 149-அரியலூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட அரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மக்களவை தேர்தல் 2024 வாக்குப்பதிவு மைய அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM), வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் இயந்திரம் (VVPAT) பயன்படுத்துவது மற்றும் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து இரண்டாவது மறு பயிற்சிகள் இன்று நடைபெற்றது.
மேலும், அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வெளி மாவட்டத்தைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தபால் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
இதேபோன்று 150.ஜெயங்கொண்டம் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் இரண்டாவது மறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும் இப்பயிற்சியானது அரியலூர் மாவட்டத்தில் உள்ள 149.அரியலூர் மற்றும் 150.ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 596 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 2909 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதில் பிற மாவட்டத்தை சேர்ந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மான்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 248 தபால் ஓட்டுகளும், மேலும் ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 225 தபால் ஓட்டுகளும் வழங்கப்பட்டு தபால் ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் அரியலூர் ஆனந்தவேல், மண்டல அலுவலர்கள், வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.