திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த கண்ணனூரில் உள்ள குரும்பர் குல தெய்வமான மகாலட்சுமி கோயிலில் தமிழ்நாடு குரும்பர் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் பாரிவேந்தர் பங்கேற்றார்.
முன்னதாக, துறையூர் பகுதி யில் உள்ள கொட்டையூர், முருகூர், சிக்கத்தம்பூர், செங்காட்டுப்பட்டி, ரங்கநாதபுரம் மற்றும் வேங்கடத்தனூர் பகுதிகளில் தாமரை சின்னத்துக்கு பாரிவேந்தர் வாக்கு கேட்டார். அப்போது, “பச்சமலை சுற்றுலா மையமாக தரம் உயர்த்தப்படும். மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், கழிப்பறைகள், நியாய விலைக் கடைகள், மேல்நிலை
நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளிட்ட பணிகளை ரூ.17 கோடியில் செய்துள்ளேன். கொரோனா பாதிப்பு காலத்தில்
எனது சொந்த நிதியில் மருத்துவ மனைகளுக்கு படுக்கைகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளை செய்து தந்துள்ளேன். தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வேன்” எனக் கூறி வாக்கு சேகரித்தார்.
வேங்கடத்தனூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பாரிவேந்தரின் மரு மகள் மங்கையர்க்கரசி பங்கேற்று. பாரிவேந்தர் செய்த நலப்பணிகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வுகளில், ஐஜேகே பொதுச் செயலாளர் ஜெயசீலன், செயலாளர்கள் சத்தியநாதன், வெங்கடேசன், வாகிகள் சபா ராஜேந்திரன், கடலூர்தர்மலிங்கம், அமமுகமாவட்டச் செயலாளர் ராஜசேகரன், துறையூர் நகரச் செயலாளர் பீரங்கி சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் மோகன்தாஸ் மற்றும் பாஜக, பாமக , தமிழர் தேசம் நிர்வாகிகள் பங்கேற்றனர்.