தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா புள்ளபூதங்குடி மெயின் ரோட்டில் வசிப்பவர் அய்யப்பன். இவரது மனைவி காசியம்மாள். இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது. இரண்டு பெண் குழந்தைகள். இவர்களது இளைய மகள் ராஜஸ்ரீ வயது ஒன்றரை, இவர் தனது வீட்டின் முன்புறம் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவரது இளைய மகள் ராஜஸ்ரீ வீட்டில் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது கூனஞ்சேரியிலிருந்து சுவாமிமலை நோக்கி வேகமாக சென்ற டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக குழந்தை ராஜஸ்ரீ மீது மோதியது. உடனடியாக குழந்தையை அவரது தந்தை ஐயப்பன் மற்றும் அவரது மனைவி காசியம்மாள் ஆகியோர் இரண்டு சக்கர வாகனத்தில் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அய்யப்பன் கபிஸ்தலம் காவல்நிலத்தில் புகார் செய்தார். இதன் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து டிப்பர் லாரி ஒட்டி வந்த திருவிடைமருதூர் தாலுகா தேப்பெருமாநல்லூர் பிரசாத் (52) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.