பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் கந்தசாமி – லட்சுமணன். கந்தசாமி பாரதிய ஜனதா கட்சியில் பெரம்பலூர் தெற்கு ஒன்றிய தலைவராக பொறுப்பில் உள்ளார்.இந்நிலையில் சகோதரர்கள் கந்தசாமி மற்றும் லட்சுமணன் இன்று மாலை லாடபுரம் கிராமத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.
அப்பொழுது அதே ஊரை சேர்ந்த ராஜா என்பவர் கந்தசாமியிடம் பத்து ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கு என்ன செய்தது என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது கந்தசாமிக்கும் ராஜாவுக்கும் கைகலப்பு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் ராஜா மற்றும் அவரது நண்பர்கள் 10 பேர் சேர்ந்து கந்தசாமி மற்றும் இலட்சுமனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சகோதரர்கள் கந்தசாமி மற்றும் லட்சுமணனை சரமாரியாக தலை கழுத்து முதுகு பகுதியில் கத்தியால் வெட்டியுள்ளார்.
இதில் சகோதரர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை பெற்றுக்கொண்டு வருகின்றனர்.