நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்களை அரசியல் கட்சிகள் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு தேர்தல் ஆணையம் பறக்கும் படைகளை அமைத்துள்ளது.
அதன்படி உரிய ஆவணம் இன்றி ரூ 50 ஆயிரத்திற்கு மேல் எடுத்துச் செல்பவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்வது மற்றும் அளவுக்கு அதிகமான பரிசுப் பொருட்களை ஏற்றி செல்லும் பொழுது அவற்றையும் பறிமுதல் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி இன்று திருவெறும்பூர் அருகே பனையக்குறிச்சி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரியும் துவாக்குடி மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளருமைான கிருஷ்ண பிரசாந்த் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபொழுது தோகூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த காரை மறித்து சோதனை செய்தனர்.
காரில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ64 பணம் இருப்பது தெரிய வந்தது.கிருஷ்ண பிரசாந்த் தலைமையிலான பறக்கும் படையினர் கைப்பற்றினர் பின்னர் அவரிடம் விசாரித்த பொழுது அவர் தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே உள்ள தோகூரை சேர்ந்த நாகராஜ் மகன் பாக்யராஜ் (45) என்பதும் கட்டிட வேலைக்காக பணத்தை எடுத்துச் செல்வதாக கூறியுள்ளார். இருந்தும் உரிய ஆவணம் இல்லாததால் அவர் இந்த பணத்தை பறிமுதல் செய்து திருவெறும்பூர் தாசில்தார் செயப்பிரகாசத்திடம் ஒப்படைத்தனர்.